முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பதவி : ஆஸ்திரேலிய வீரர் ஸ்டுவர்ட் லா ஏற்க மறுப்பு

வியாழக்கிழமை, 5 மே 2016      விளையாட்டு
Image Unavailable

கராச்சி  - பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பதவியேற்கும் படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டுவர்ட் லாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஸ்டுவர்ட் லா ஏற்க மறுத்தார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரை நியமிப்பதில் உள்ள தடைகள் நீடிக்கின்றன. உலக டி 20 கிரிக் கெட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மோசமான தோல்வியை தழுவியது. இந்த தோல்வியை தொடர்ந்து அந்த அணியின் பயிற்சியாளர் மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் அந்த அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்க ஆஸ்திரேலியாவின் டுவர்ட் லாவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்பு கொண்டது. அப்போது அதன் அழைப்பை ஸ்டுவர்ட் லா உடனடியாக ஏற்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்தார். அவரை சமரசப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது. அவர் பாகிஸ்தான் கிரிக் கெட் போர்டின் அழைப்பை ஏற்காத பட்சத்தில் இங்கிலாந்து வீரர் ஆண்டி மோல்ஸ் அல்லது ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் ஆகியோரில் ஒருவரை பயிற்சியாளராக நியமிப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.  இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சகாரயர் கான் கூறுகையில்,

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டுவர்ட் லாவை நியமிப்பதில் சில தடைகள் இருக்கின்றன. இருப்பினும் அவரைத்தான் தலைமை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என விரும்புகிறோம்.   அவர் பயிற்சியாளராக ஆவதற்கு விண்ணப்பித்து இருந்தார். தற்போது அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இருக்க விரும்புகிறார் அவர் தற்போது உடனடியாக பாகிஸ்தான் அணியில் சேரும் நிலை இல்லை என்றும் தெரிவித்து இருக்கிறார். முன்னாள் டெஸ்ட் பேட்ஸ் மேனான லா ஏற்கனவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை செல்லும் ஆஸ்திரேலிய அணிக்கு அவர்ஆலோசகராக இருப்பார். 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. வருகிற ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இலங்கையில் ஆடுகிறது.  இதன் பின்னர் ஆஸ்திரேலியா நவம்பர்-டிசம்பர் மாதத்தில் பாகிஸ்தானுடன் ஆடுகிறது. எனவே பாகிஸ்தானின் அணியில் பயிற்சியாளராக ஸ்டுவர்ட் லா சேருவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்  தலைமை பயிற்சியாளரை நியமிப்பதில்  சிரமமான விஷயமாக உள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிப்பதில் ஸ்டுவர்ட் லாவை முக்கியமாக விரும்புகிறோம். அப்படி நடக்காத பட்சத்தில் இங்கிலாந்து வீரர் ஆண்டி மோல்சை பயிற்சியாளராக நியமிக்க முடிவு செய்து இருக்கிறோம்.  மோல்ஸ், கென்யா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார் .

அவர் அந்த நாட்டு வீரர்கள் அல்லது கிரிக்கெட் வாரியத்துடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு விலகி இருக்கிறார். எனவே அவரை பயிற்சியாளராக நியமிப்பதில் நாங்கள் யோசித்து வருகிறோம்.   இருப்பினும் இன்னும் இரண்டு அல்லது 3நாட்களில் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்பது முடிவாகும். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்த பயணத்திற்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளரை நியமிக்க விரும்புகிறோம்.  தலைமை பயிற்சியாளரை நியமித்தவுடன் அணியின் இதர ஊழியர்களை நியமிப்போம் என்றுபாகிஸ்தான் கிரிக் கெட் வாரிய தலைவர் சகாரயர் கான் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்