முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சகாரா நிறுவன முறைகேட்டில் சிக்கிய சுப்ரதாராய்க்கு 4 வார பரோல் தாய் இறுதி சடங்கில் பங்கேற்க அனுமதி

வெள்ளிக்கிழமை, 6 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - சகாரா நிறுவன முறைகேடுவழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுப்ரதாராயின்தாயார் மரணமடைந்தார்.அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் 4வாரபரோல் அளித்துள்ளது.  சகாரா நிறுவன மோசடியில் அதன் தலைவர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது 95வயது  தாய் சப்பி ராய் லக்னோவில் நேற்று மரணம் அடைந்தார். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு இருந்தார்.

அவரது இறுதிச்சடங்கில் சுப்ரதா ராய் கலந்து கொள்ள  சுப்ரீம் கோர்ட் 4வார பரோல் அளித்தது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாகுர், நீதிபதிகள் ஏ.ஆர்.தவே மற்றும் ஏ.கே. சிக்ரி ஆகியோரை கொண்ட அமர்வாயம் சுப்ரதா ராயின்  மனுவை விசாரணை செய்து அவருக்கு 4வார பரோல் அளித்தனர்.

சகாரா நிறுவனத்தின் இயக்குனர் அசோக் ராய்க்கும் உச்ச நீதிமன்றம் பரோல் அளித்தது.  பரோலில் சுப்ரதா ராய் சென்றாலும் அவர் போலீசின் பாதுகாப்பில் இருப்பார்.  எனவே அவர் தப்பி ஓட முயற்சிக்க கூடாது என்று கோர்ட் கண்டிப்புடன் கூறியது. சுப்ரதா ராய் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 4ம் தேதியில் இருந்து டெல்லி திகார் சிறையில் இருந்து வருகிறார். செபி அமைப்புடன் உள்ள பிரச்சினை காரணமாக உச்ச நீதிமன்றம் உத்தரவின் காரணமாக  சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்