முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புற்றுநோயால் பாதித்த குழந்தைகளுக்கு கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நம்பிக்கை

திங்கட்கிழமை, 16 மே 2016      விளையாட்டு
Image Unavailable

மொகாலி  -  புற்று நோயால் பாதித்த 17 குழந்தைகளிடம் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நேற்று கலந்துரையாடினார். அப்போது புற்றுநோயால் தான் மீண்டு வந்ததைப்போல நீங்களும் குணமடைந்து சாதனை படைப்பீர்கள் என்று அந்த வீரர் நம்பிக்கை அளித்தார்.
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புற்று நோயால் பாதித்த 17 குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் கலந்துரை யாடினார்.

அந்த கலந்துரையாடலின் போது  சண்டிகரை சேர்ந்த யுவராஜ் சிங் மீண்டும் ஒரே ஓவரில் 6சிக்சரை அடிப்பாரா என்று ஒரு சிறுவன் கேட்டான். அதற்கு பதிலளித்த யுவராஜ் சிங், நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் நான் நிச்சயம் 6சிக்சர்களை ஒரு ஓவரில் அடிப்பேன் என நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2007ம் ஆண்டு, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்தது. அப் போது, யுவராஜ் சிங் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட்டுக்கு எதிராக ஒரு ஓவரில் 6சிக்சர் அடித்து சாதனை படைத்தார். அதுபோன்ற சாதனையை எப்படி நிகழ்த்தினேன் என்று தெரிய வில்லை என்று யுவராஜ் சிங் குழந்தைகளிடம் உரையாடும் போது தெரிவித்தார்.

 புற்று நோயால் பாதித்து உயிர் பிழைத்த 8வயது சிறுவன்,தன்னை ஈர்த்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் என்று புன்னகையுடன் தெரிவித்தான்.அந்த சிறுவன் 18மாத குழந்தையாக இருந்தபோது, புற்றுநோய் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்ட அந்த சிறுவன் புற்று நோயால் பாதித்து கிரிக்கெட்டில் சாதனை படைத்து வரும் யுவராஜ் சிங்கை தான் மிகவும் விரும்புவதாக தெரிவித்தான்.

சுரேஷ் ரெய்னா, மற்றும் யுவராஜ் சிங்கின் ஆட்டம் தன்னை மிகவும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவதாக அந்த சிறுவன் மேலும் தெரிவித்தான். கடந்த 2011ம்ஆண்டு உலககோப்பை கிரிக்கெட்டின் போது டோர்ணமென்ட்டின் சிறந்த வீரராக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டு அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தகவல்  சோதனையில்தெரியவந்தது. அவர் பின்னர் அந்த கொடிய நோயில் இருந்து உறுதியுடன்போராடி உயிர் பிழைத்து தற்போது டி20போட்டிகளில் சாதனை படைத்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்