முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

செவ்வாய்க்கிழமை, 17 மே 2016      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : ஐ.பி.எல். லீக் கொல்கத்தா அணியை 9 விக்கெட்  வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் வெற்றி பெற்றது. தோல்விக்கு விராட் கோலி கொடுத்த கேட்சை பிடிகாததே காரணம் என்று கொல்கத்தா கேப்டன் காம்பீர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 183 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய பெங்களூர் அணி 18.4 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 186 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். கேப்டன் விராட்கோலி 51 பந்தில் 75 ரன் எடுத்தார். 32 ரன்னில் இருந்தபோது கோலி கொடுத்த கேட்ச்சை காம்பீர் தவறவிட்டார்.

தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் காம்பீர் கூறியதாவது:– இது நல்ல ஆடுகளம் என்று நினைக்கிறேன். இதில் 180 ரன் முதல் 190 ரன் எடுக்கலாம். அதை செய்துவிட்டோம். ஆனால் நான் தவறவிட்ட கேட்ச் (கோலியின் கேட்ச்) திருப்புமுனையாக அமைந்து விட்டது. பெங்களூர் சேசிங் செய்வதில் சிறந்த அணி என்பதை அறிவோம். ஆனால் எங்களது பவுலர்கள் நல்ல பங்களிப்பையே அளித்தனர். ஆந்த்ரே ரஸ்சல் அணியின் முக்கியமான வீரர். அவரது காயம் பெரிய அளவில் இருக்காது என்று நம்புகிறேன் என்றார்.

வெற்றி குறித்து பெங்களூர் கேப்டன் கோலி கூறுகையில், இந்த ரன்னை சேசிங் செய்ய களத்தில் நான் நிற்கவேண்டும் என்பதை அறிவேன். மீண்டும் ஒரு முறை டிவில்லியர்ஸ் என்னுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தார். அந்த உணர்வு அற்புதமானது. இந்த வெற்றி உத்வேகத்தை மீதமுள்ள 2 ஆட்டங்களுக்கு கொண்டு செல்வோம். தற்போது நெருக்கடியான நிலையில் இருக்கிறோம். ஆனால் அதை விரும்புகிறோம். கையில் ஏற்பட்ட வலியால் பேட்டிங் செய்ய முடியுமா? என பயந்தேன். ஆனால் என்ன விலை கொடுத்தாவது நான் விளையாடுவேன் என்று பிசியோதரப்பியிடம் கூறினேன். என் மீது நெருக்கடி விழாதவாறு டிவில்லியர்ஸ் விளையாடினார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்