அ.தி.மு.க. தேர்தல் வெற்றிக்காக நடிகை நமீதா திருப்பதியில் குடும்பத்தினருடன் வேண்டுதல் நிறைவேற்றினார்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2016      இந்தியா
Image Unavailable

திருப்பதி :  அ.தி.மு.க. மீண்டும்வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்திருந்த நடிகை நமீதா அ.தி.மு.க மீண்டும் ஆட்சி அமைப்பதை தொடர்ந்து திருப்பதிக்கு குடும்பத்தினருடன் சென்று வேண்டுதலை நிறைவேற்றினார்.
 நடிகை நமீதா சட்டசபை தேர்தலுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதாவை சந்த்தித்து அ.தி.மு.கவில் சேர்ந்தார்.. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெறும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அ.தி.மு.க சமீபத்திய சட்டசபை தேர்தலில் 134 தொகுதிகளில் வென்று ஆட்சியை மீண்டும் அமைத்தது. இந்த தேர்தல் வெற்றிக்காக வேண்டுதல் வைத்திருந்த நடிகை நமீதா நேற்று திருப்பதிக்கு குடும்பத்தினருடன் சென்று வேண்டுதலை நிறைவேற்றினார். ரசிகர்கள் அவரை பார்த்தபோது இரட்டை விரலை காட்டி  மகிழ்ச்சி தெரிவித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய நலத்திட்டங்களால் அ.தி.மு.கவிற்கு மகத்தான வெற்றி கிடைத்திருக்கிறது. அவர் வெற்றி பெறுவார் என்று எல்லோருக்கும் தெரியும். அவரது நல்லாட்சி தொடர மக்கள் வாக்களித்துள்ளனர்.

அ.தி.மு.க தேர்தல் வெற்றிக்காக வேண்டிக்கொண்ட நான் அந்த வேண்டுதலை நிறைவேற்ற தற்போது திருப்பதி கோவிலில் சுவாமியை தரிசனம் செய்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: