Idhayam Matrimony

காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலில் 74 பொதுமக்கள் பலி

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2025      உலகம்
Gaza 2024-04-15

Source: provided

காசாமுனை : காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 74 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.

பாலஸ்தீனத்தின் காசாமுனை மீதான இஸ்ரேலின் போர் 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது. இதில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே உணவுக்காக காத்திருக்கும் காசா மக்கள் மீது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறார்கள். இதில் பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் காசா நகரில் உள்ள அல்-பக்கா கபே உணவகத்தில் உணவுக்காக பெண்கள், சிறுவர்கள் உள்பட பலர் காத்திருந்தனர். அப்போது அங்கு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 23 பேர் பலியானார்கள். அதேபோல் தெற்கு காசாவில் உணவு தேடி வந்த 11 பேரை இஸ்ரேலிய படைகள் கொன்றதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்த தாக்குதல்களில் மொத்தம் 74 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து