முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பந்து வீச்சாளர் தரவரிசையில் தமிழக வீரர் அஸ்வின் 2வது இடம்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2016      விளையாட்டு
Image Unavailable

துபாய் : உலகின் சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தமிழக சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் 2வது இடம் பெற்றார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த தரப்பட்டியலை வெளியிட்டது.

டெஸ்ட் போட்டிகளில் உலகில் தலை சிறந்து விளங்கும் பேட்ஸ்மென்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்வெளியிட்டு வருகிறது. தற்போது அந்த உலக கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டுள்ள தரப்பட்டியலில் இந்திய டெஸ்ட் அணியின் சுழல் பந்து வீச்சாளரும் , தமிழகத்தை சேர்ந்தருவமான அஸ்வின் ரவிச்சந்திரன் 2வது இடத்தைபெற்றார். அவர் 871புள்ளிகள் பெற்று இந்த மதிப்பு மிக்க இடத்தை பிடித்துள்ளார்.  உலக டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இங்கிலாந்தின்  ஸ்டூவர்ட் பிராட் 872 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஹெடிங்லி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 10விக்கெட்டுகளை கைப்பற்றியதை தொடர்ந்து உலக பந்து வீச்சாளர் தர வரிசையில் 3வது இடத்தை பெற்றார். அவர்  மொத்தம் 854புள்ளிகள் எடுத்திருந்தார்.

உலக டெஸ்ட் பேட்ஸ்மென்கள் வரிசையில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 925புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். அவரையடுத்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டும்(876புள்ளி) 3வது இடத்தை நியூசிலாந்து கேப்டன் கானே வில்லியம்சும்(868புள்ளி) 4வது இடத்தை தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ஹசீம் அம்லா வும்(869புள்ளி) 5வது இடத்தை பாகிஸ்தான் பாட்ஸ்மேன் யூனூஸ்கானும்(826புள்ளி) பெற்றார்கள்.

உலக டெஸ்ட் ஆல்ரவுன்டர்கள் தர வரிசையில் அஸ்வின் ரவிச்சந்திரன்  406 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். வங்க தேச ஆல்ரவுன்டர் ஷாகிப் அல் ஹசன் 2வது இடத்திலும் அவரையடுத்து இங்கிலாந்து ஆல் ரவுன்டர் பிராட்டும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்