முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

செவ்வாய்க்கிழமை, 24 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 232 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் தி.மு.க. வேட்பாளர்கள் 89 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வெற்றிபெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக அக்கட்சியின் பொருளாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்