முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கலெக்டர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தலைமைச் செயலாளர் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 24 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் கலெக்டர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் வி.சம்பத், பயிற்சி நிறைவைத் தொடர்ந்து அதே மாவட்டத்தின் கலெக்டராக நியமிக்கப்படுகிறார். தேனி மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் என்.வெங்கடாச்சலம், பயிற்சி நிறைவைத் தொடர்ந்து அதே மாவட்டத்தின் கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் டி.என்.ஹரிகரன், பயிற்சி நிறைவைத் தொடர்ந்து அதே மாவட்டத்தின் கலெக்டராக நியமிக்கப்படுகிறார். வேலூர் மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் ஆர்.நந்தகோபால் விடுமுறை முடித்ததைத் தொடர்ந்து அதே மாவட்டத்தின் கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.
நெல்லை மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் எம்.கருணாகரன், பயிற்சி நிறைவைத் தொடர்ந்து அதே மாவட்டத்தின் கலெக்டராக நியமிக்கப்படுகிறார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனர் எஸ்.கணேஷ், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி எம்.மதிவாணன், திருவாரூர் கலெக்டராக மாற்றப்படுகிறார். தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் (கோ-ஆப் டெக்ஸ்) மேலாண்மை இயக்குனர் ஏ.ஞானசேகரன், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பூஜா குல்கர்னி, மாநில சர்வ சிக்ஷா அபியான் திட்ட இயக்குனராக மாற்றப்படுகிறார். நெல்லை மாவட்ட கலெக்டர் சி.சமயமூர்த்தி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனராகிறார்.

சேலம் மாவட்ட மூத்த கலெக்டர் டி.கார்த்திகேயன், தொல்பொருள் ஆராய்ச்சி கமிஷனராக நியமிக்கப்படுகிறார். திண்டுக்கல் மாவட்ட மூத்த கலெக்டர் சத்தியபிரதா சாகு, போக்குவரத்து கமிஷனராக மாற்றப்படுகிறார்.

தேனி மாவட்ட கலெக்டர் எஸ்.நாகராஜன் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகவும், தகவல் தொழில்நுட்பத் துறையின் அலுவல் சாரா இணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் டி.என்.வெங்கடேஷ், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மேலாண்மை இயக்குனராகிறார். புதுக்கோட்டை மாவட்ட மூத்த கலெக்டர் எஸ்.ஸ்வர்ணா, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

வேலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ, பூம்புகார் கப்பல் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறையின் இயக்குனர் ஜெ.குமரகுருபரன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கழகத்தின் மேலாண்மை இயக்குனராக முழு பொறுப்பு வகிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்