முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

16 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் சச்சின் மகன் அர்ஜூனுக்கு இடம்

புதன்கிழமை, 25 மே 2016      விளையாட்டு
Image Unavailable

மும்பை  - மண்டல வாரிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் போட்டியில் 16 வயதிற்குட்பட்டோருக்கான மேற்கு மண்டல அணியில் சச்சின் மகன் அர்ஜூன் இடம் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்தவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். அவரது மகன் அர்ஜூன் தற்போது 16 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். மண்டல வாரியான அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் 24-ம் தேதி ஹூப்ளியில் தொடங்குகிறது. இதற்கான மேற்கு மண்டல 16 வயதிற்குட்பட்டோருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் அர்ஜூன் டெண்டுல்கருக்கு இடம் கிடைத்துள்ளது. மேற்கு மண்டல 16 வயதிற்குட்பட்டோருக்கான வீரர்கள் விவரம் வருமாறு:- 1. ஓம் போஸ்லே (கேப்டன்), 2. வாசுதேவ் பட்டீல், 3. சுவேத் பார்க்கர், 4. ஸ்மித் பட்டேல், 5. சன்ப்ரீத் பக்கா, 6. யாஷாஷ்வி ஜெய்ஸ்வால், 7. திவ்யான்ஷ் சக்சேனா, 8. நீல் ஜாதவ் (விக்கெட் கீப்பர்), 9. அர்ஜூன் டெண்டுல்கர், 10. யோகேஷ் டோங்ரே, 11. அதர்வா அங்கோலேகர், 12. சுராஜ் சுர்யால், 13. சித்தார்த் தேசாய், 14. ஆகாஷ் பாண்டே, 15. முகுந்த் சர்தார். மாற்று வீரர்களாக கிரண் மோர், சத்யலக்சய ஜெயின், நிஹர் புயான், விக்னேஷ் சோலங்கி, வைபவ் பாட்டீல் இடம் பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்