முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு -காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்

வியாழக்கிழமை, 26 மே 2016      இந்தியா
Image Unavailable

 ஶ்ரீநகர்  -  பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இதன் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவதை ராணுவ வீரர்கள் முறியடித்துள்ளனர். மேலும் 4 தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.  ஜம்மு காஷ்மீரின் நவுகாம் செக்டர் பகுதியில் உள்ள தூத் மாரிக்கு அருகே  5-6பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாகநேற்று காலை ஊடுருவ முயன்றார்கள். அப்போது எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை கண்டுபிடித்து துப்பாக்கியால் சுட்டார்கள்.

இந்த தாக்குதலை எதிர்பார்க்காத தீவிரவாதிகள் அதிர்ச்சியடைந்தனர்.இருப்பினும் அவர்கள் தங்கள் கைகளில் இருந்த துப்பாக்கிகளால் இந்திய ராணுவ வீரர்களை நோக்கி திருப்பி சுட்டார்கள். இதனால் ராணுவ வீரர்களுக்கும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த தாக்குதலை  எல்லைப்பகுதியை பாதுகாக்கும்  35 ராஷ்ட்ரிய ரைபிள் படை வீரர்கள் மேற்கொண்டார்கள்.

இந்திய ராணுவ வீரர்களின் தாக்குதலில் இரு பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களது உடல் என்கவுன்ட்டர் நடந்த இடத்திற்கு அருகாமையில் கிடந்தன. இதர பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடர்ந்தபுதர் பகுதிகளில் தேடும் பணியை ராணுவ வீரர்கள் தொடர்ந்து மேற்கொண்டனர்.பாகிஸ்தான் எல்லையின் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இதர தீவிரவாதிகளையும் சுட்டுக்கொல்லும் நடவடிக்கையில், ராஷ்ட்ரிய ரைபிள் வீரர்களுடன் 18ஜாட் மற்றும் முதல் நாகா படைப்பிரிவினர் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்