முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 99.69 சதவீத தேர்ச்சியுடன் சென்னைக்கு இரண்டாவது இடம்

சனிக்கிழமை, 28 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, மத்திய கல்வி திட்டமான சி.பி.எஸ்.சி. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்  நேற்று வெளியாகியுள்ள நிலையில் நாட்டிலேயே 99.69 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் சென்னையை சேர்ந்த மாணவ-மாணவியர்கள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர்.

மத்திய கல்வி திட்டமான சி.பி.எஸ்.சி. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்  நேற்று  வெளியாகியுள்ள நிலையில் நாட்டிலேயே 99.69 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் சென்னையை சேர்ந்த மாணவ-மாணவியர்கள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர்.

நாடு முழுவதும் 14 லட்சத்து 91 ஆயிரத்து 293 மாணவ-மாணவியர் இந்த ஆண்டு சி.பி.எஸ்.சி. பாட திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதியிருந்தனர். இன்று பிற்பகல் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த ஆண்டு மாணவ-மாணவியரின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 96.21 சதவீதமாக உள்ளது. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவியர் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டும் அதிகமாக உள்ளது.  மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.87 சதவீதமாகவும், அதற்கு அடுத்தபடியாக கேந்திர வித்யாலயா பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.85 சதவீதமாகவும் உள்ளது. தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.72 சதவீதமாகவும், மாநில அரசுகளின் கண்காணிப்பில் இயங்கும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 86.61 சதவீதமாகவும் உள்ளது.நாட்டிலேயே 99.87 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவியர் முதலிடத்தையும், தமிழகத்தின் தலைநகரான சென்னை மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவியர் 99.69 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்