முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் தலிபான் தலைவர் மன்சூர் இறந்து விட்டார் மரபணு சோதனையில் உறுதி: பாகிஸ்தான்

திங்கட்கிழமை, 30 மே 2016      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  -  ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாத தலைவர் முல்லா அக்தர் மன்சூர் அமெரிக்காவின் விமானத்தாக்குதலில் இறந்து விட்டார்.  மரபணு சோதனையில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது,  அமெரிக்கா நடத்திய விமானத்தாக்குதலில் இறந்த நபர் தலிபான் தீவிரவாத தலைவர் முல்லா அக்தர் மன்சூர் ஆவார்.  முல்லா அக்தரின் உறவினரின் மரபணு சோதனையும், இறந்த நபரின் மரபணுவும் ஒரே மாதிரியாக உள்ளன.

எனவே அமெரிக்க தாக்குதலில்  முல்லா அக்தர்தான் இறந்துள்ளார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.என தெரிவித்துள்ளது. இந்த மாதம் 21ம் தேதியன்று  தலிபான் தலைவர் மன்சூரும் அவரது பாகிஸ்தான் டிரைவர் முகமது ஆசமும் அமெரிக்க தாக்குதலில்  கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் பலுசிஸ்தானின் நோஷிகி மாவட்டத்தில் நடந்தது. அவர்கள் சட்டவிரோதமாக ஈரானில் இருந்து சாலை வழியாக வந்தபோது தாக்கப்பட்டார்கள்.

பாகிஸ்தான் பகுதியில் ஆளில்லா விமானத்தாக்குதல் நடத்தியது தங்கள் நாட்டின் இறையான்மையை மீறிய செயல் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், முல்லா அக்தருடன் கொல்லப்பட்ட பாகிஸ்தான் டிரைவரின் குடும்பத்தினர்  நேற்று முன்தினம் போலீசில் அமெரிக்க அரசுக்கு எதிராக  புகார் செய்துள்ளனர். தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்