முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் லட்டு தயாரிக்கும் அறையில் பயங்கர தீ ரூ20லட்சம் பொருட்கள் சேதம்

வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை  - திருப்பதியில் லட்டு தயாரிக்கும் அறையில் பயங்கரத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் ரூ20லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.  திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப்பிரசித்தி பெற்ற திருக்கோவிலாக விளங்குகிறது. இங்கு வரும்பக்தர்களுக்கு வாரி வழங்கும் தெய்வமாக ஏழுமலையான் கடவுள் வீற்றிருக்கிறார். அவரது அருட்பார்வையை பெற இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா மாநில பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகிறார்கள். விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள் ஆகிய தினங்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் பல மடங்கு அதிகரிக்கிறது.  இதனால் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இலவச தரிசனம் மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கு ரூ300கட்டணம் செலுத்தி தரிசிக்க வசதி ,அன்னதானம் போன்றவை செய்யப்படுகின்றன. இது தவிர வி.,ஐ.பி. தரிசனம் வசதியும் செய்து தரப்படுகிறது.

 இவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் சலுகை விலையிலும் வெளிமார்க்கெட் விலையிலும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த லட்டு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. திருப்பதி வரும் அனைத்துப்பக்தர்களும் லட்டு வாங்க நீண்ட வரிசையில் காத்திருப்பது நாள் தோறும் நடைபெறும் நிகழ்வாகும். பக்தர்களிடம் மிகவும் புகழ்வாய்ந்த இந்த லட்டு தயாரிக்கும் பகுதிக்கு தனி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு தினமும் 3லட்சம் லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.  இதற்கு தேவையான பூந்தி கோயிலுக்கு வெளியே வடக்கு திசையில் உள்ள கட்டிடத்தில் தயாரிக்கப்படுகிறது. சுகாதாரமான முறையில் பூந்தி தயாரிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் அவை ஆட்கள் மூலம் கொண்டு வர காலதாமதம் ஆகும் என்பதால், சுமார்  8ஆண்டுகளுக்கு முன்னர்  கன்வேயர் பெல்ட் மூலம் லட்டு தயாரிக்கும் அறைக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் செல்லப்படுகிறது. தூய்மையான நெய், கடலை மாவு, முந்திரி, திராட்சை, கல்கண்டு ஆகியவற்றை சேர்த்து இந்த லட்டு தயாரிக்கப்படுகிறது. பூந்தி,லட்டு தயாரிக்கும் பணியில்  492ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் 3 ஷிப்டுகளில் வேலைப்பார்க்கிறார்கள்.  இந்த நிலையில் நேற்று காலை 6.30மணியளவில் பூந்தி தயாரிக்கும் பணி வழக்கம்போல் நடைபெற்று வந்தது. அப்போது தீயின் வேகம் அதிகரித்ததால் திடீரென்று  பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  அந்த அறையில் மேல் பகுதியில்படிந்து இருந்த எண்ணெய் பசையில் தீப்பிடித்து தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.

 அப்போது பணியில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் உடனடியாக அறையை விட்டுவெளியே ஓடி வந்தார்கள். மேலும் இந்த தீ விபத்து குறித்து அறிந்ததும்  அதிகாரிகள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருப்பதி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தார்கள். அவர்கள் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தார்கள். இந்த லட்டுதயாரிக்க பயன்படும் பாத்திரங்கள் பூந்தி தயாரிக்க வைத்திருந்த நெய் மற்றும் கடலை மாவு, முந்திரி,திராட்சை, ஆகியவை தீயில் கருகி சேதம் அடைந்தன. இந்த தீவிபத்தில் ரூ20லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.  லட்டு தயாரிப்பில் ஈடுபட்ட பணியாளர்கள் உடனடியாக வெளியேறியதால் அனைவரும் உயிர்பிழைத்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்