முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் சேர இந்தியாவுக்கு ஆதரவு கிடையாது : சீனா திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2016      உலகம்
Image Unavailable

சியோல்  - அணு ஆயுத பரவல் தடை உடன்பாட்டில் கையெழுத்திடாதவரை என்.எஸ்.ஜி.யில் சேர இந்தியாவிற்கு ஆதரவு இல்லை என சீனா திட்டவட்டாமாக தெரிவித்துள்ளது. தென்கொரிய தலைநகர் சியோலில் என்எஸ்ஜி நாடுகளின் 2 நாள் ஆண்டுக் கூட்டம் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதில், என்எஸ்ஜி-யில் இந்தியாவை சேர்ப்பது தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்பட்டது. 48 நாடுகளைக் கொண்ட என்.எஸ்.ஜி. என்னும் அணுசக்தி வழங்கும் நாடுகள் குழுமத்தின் 2 நாள் கூட்டம், தென்கொரியாவின் தலைநகர் சியோலில் நேற்று முன்தினம் தொடங்கியது. 

அணுசக்தி வணிகத்தில் ஈடுபடவும், அணு தொழில்நுட்ப ஏற்றுமதி செய்யவும் இந்த குழுமத்தில் இந்தியா சேர வேண்டியது அவசியம் ஆகிறது. இதில் சேர இந்தியா விண்ணப்பம் அளித்துள்ளது. இதேபோன்று பாகிஸ்தானும் விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில் உரிய விதிகளை பின்பற்றாதவரை இரு நாடுகளுக்கு என்எஸ்ஜி.யில் இணைய ஆதரவு வழங்க முடியாது என சீனா அறிவித்துள்ளது. என்.எஸ்.சி.யில் சேர இந்தியா அணு ஆயுத பரவல் தடை (என்.பி.டி)யில் கையெழுத்திடாதவரை இந்தியாவுக்கு ஆதரவு வழங்க முடியாது என சீனா தெரிவித்துள்ளது. மேலும், விரைவில் இந்தியா என்.பி.டி.யில் கையெழுத்திடும் என்ற நம்பிக்கை உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, சீன அதிபரை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது, என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராவதற்கு ஆதரவளிக்குமாறு ஜீ ஜின்பிங்கிடம் மோடி கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராக சேர அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், என்.பி.டி.யில் கையெழுத்திடாத காரணத்தால் சீனா, பிரேசில், ஆஸ்திரியா, நியூசிலாந்து, துருக்கி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் என்.எஸ்.ஜி.யில் இந்தியா, பாகிஸ்தான் இணைய கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, என்.பி.டி, என்.எஸ்.ஜி விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் ஆலோசிக்கப் போவதில்லை எனவும் சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்