முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெயின் திரைப்படவிழா: சிறந்த படம் பாஜ்ரங்கி பைஜன், நடிகையாக தீபிகா படுகோனே தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2016      சினிமா
Image Unavailable

மேட்ரிட் : ஸ்பெயின் தலைநகரான மேட்ரிட் நகரில் நடைபெற்ற 17-வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாக பாஜ்ரங்கி பைஜன் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நடிகராக ரன்வீர் கபூர், சிறந்த நடிகையாக தீபிகா படுகோனே ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
இந்தியா-ஸ்பெயின் நாடுகளுக்கிடையிலான இசை மற்றும் கலைத் தொடர்புகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ஸ்பெயின் தலைநகரான மேட்ரிட் நகரில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

அவ்வகையில், இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடந்த இந்த விழாவில் இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிய முக்கிய பாலிவுட் படங்கள் திரையிடப்பட்டன. நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சிறந்த படமாக பாஜ்ரங்கி பைஜன் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நடிகராக ரன்வீர் கபூர், சிறந்த நடிகையாக தீபிகா படுகோனே ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

விருது பெற்ற இதர கலைஞர்களின் பட்டியல் பின்வருமாறு:--
சிறந்த இயக்குனர்: சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ் மஸ்தானி)
சிறந்த துணைநடிகர்: அணில் கபூர் (தில் தடக்னே டோ)
சிறந்த துணைநடிகை: பிரியங்கா சோப்ரா  (பாஜிராவ் மஸ்தானி)
சிறந்த வில்லன் நடிகர்: தர்ஷன் குமார் (NH10)
சிறந்த நகைச்சுவை நடிகர்: திபக் டோப்ரியல் (டனு வெட்ஸ் மனு)
சிறந்த அறிமுக நடிகர்: விக்கி கவுஷல் (மாஸான்)
சிறந்த அறிமுக நடிகை: பூமி பெட்னேகர் (டம் லகா கே ஹைஸா)
சிறந்த அறிமுக தம்பதியர்: சூரஜ் பஞ்சோலி - ஆதித்யா ஷெட்டி (ஹீரோ)
சிறந்த கதை: ஜுஹி சதுர்வேதி (பிக்கு)
சிறந்த பின்னணிப் பாடகி: மோனாலி தாக்கூர் (பாடல்: மோ மோ கே தாகே, படம்: டம் லகா கே ஹைஸா)
சிறந்த பின்னணிப் பாடகர்: பப்போன் (பாடல்: மோ மோ கே தாகே, படம்: டம் லகா கே ஹைஸா)
சிறந்த பாடலாசிரியர்: வருண் க்ரோவெர் (பாடல்: மோ மோ கே தாகே, படம்: டம் லகா கே ஹைஸா)
‘கடந்த ஆண்டின் சிறந்த பெண்மணி’ சிறப்பு விருது: பிரியங்கா சோப்ரா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்