முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் : இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷண் உறுதி

திங்கட்கிழமை, 27 ஜூன் 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி :  பிரேசில் ரியோடி ஜெனிரோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன் என்று இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷண்நம்பிக்கை தெரிவித்தார்.

பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் வருகிற ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது . 4ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த சர்வதேச விளையாட்டு விழாவில் உலகின் அனைத்து நாடுகளின் வீரர்கள் , வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன் பங்கேற்க தகுதி பெற்றார். அவர் சமீபத்தில் அஜர் பைஜானில்உள்ள பகு நகரில்  நடந்த உலக தகுதிப்போட்டியில்  வெண்கலப்பதக்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
இந்த வீரர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது,

ரியோ ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.ஒலிம்பிக் போட்டியின் முதல் இரு சுற்றுகளில் சவால் எழுப்பும் வீரர்களுடன் மோத வேண்டிய நிலை இருக்காது என்றே நினைக்கிறேன்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றேன் அந்த போட்டி நடைபெறுவதற்கு முன்னர் 8மாதம் முன்பாகதான் தகுதி பெற்றேன். இருப்பினும் நான் லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற முடியவில்லை.தற்போதைய போட்டியின் போது பதட்டத்துடன் இருந்தேன்.  ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற நான் கடுமையாக பயிற்சி செய்தேன். ஒரு நாள்கூட நான் ஓய்வு எடுக்கவில்லை.இதன் விளைவுதான் அஜர்பைஜானில் உள்ள பகு உலக தகுதி போட்டியில் எனக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

பகு போட்டியின் போது எனக்கு கால் இறுதி மோதலில், காயம் ஏற்பட்டது. இதனால் எனக்கு இரு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. அதன் பின்னர் நான் பிரேசில் ஒலிம்பிக்கிற்காக வெனிசுலாவில் பயிற்சி பெற செல்கிறேன்.இந்த மாதம் 30ம் தேதியன்று வெனிசுலா செல்கிறேன். நான் அந்த நாட்டில் ஜூலை 3ம் தேதியன்று இருப்பேன். இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்