முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிசர்வ் வங்கி கவர்னரின் பதவிக்காலத்தை 4ஆண்டாக அதிகரிக்க ரகுராம் ராஜன் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  நாட்டின் மத்திய வங்கியான ரிசவ் வங்கியின் கவர்னர் பதவிக்காலத்தை 3ஆண்டு ஆண்டு என்று இருப்பதை நான்கு ஆண்டாக அதிகரிக்க வேண்டும் என தற்போதைய கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார். இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னராக உள்ள ரகுராம் ராஜனின் பதவிக்காலம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதியுடன் முடிவடைகிறது. 

வரைத்தொடர்ந்து புதிய ரிசர்வ் வங்கி கவர்னரை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்  நிதித்துறை தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு முன்பாக நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது,  ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்காலம் தற்போது 3ஆண்டுகளாக உள்ளது. அமெரிக்காவில் உள்ளதைப்போல இந்த பதவிக்காலம் 4ஆண்டாக அதிகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 ரிசர்வ் வங்கியின் கவர்னராக மீண்டும் பதவி வகிக்க விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னரின் பதவிக்காலம் 4ஆண்டுகளாக அதிகரிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.  காங்கிரஸ் தலைவர் வீரப்பமொய்லி தலைமையிதலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு முன்பாக  ரகுராம் ராஜன் மூன்றரை மணி நேரம் விளக்கம் அளித்தார்.  வங்கிகளின் வாரா கடன் குறித்து ரிசர்வ் வங்கி ரகுராம் ராஜன் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை பாராளுமன்றக்குழு ஆய்வு செய்தது. இந்திய பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் கடந்த 2016 ஆண்டின் மார்ச் மாதம் வரை 7.6சதவீதமாக உள்ளது.

இந்த அளவு 2016-17ம் ஆண்டில் 9.3சதவீதமாக இருக்கும் என ரகுராம் ராஜன் குறிப்பிட்டார். கடன்கள் வழங்குவதில் தனியார் வங்கிகள் மிக தீவிரமாக செயல்படுகின்றன. ஆனால் பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குவதில் தயக்கம் காட்டும் நிலை உள்ளது.  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியதாலும், உலக பொருளாதார  நிலையாலும் இந்தியாவில் பொருளாதார நிலையில் ஏற்பட்டு பாதிப்புகள் குறித்தும் ரகுராம் ராஜன் தெரிவித்தார். முன்னதாக ரகுராம் ராஜன் நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்