முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் இரு சக்கரவாகனங்கள் பயன்படுத்துவோர் ஹெல்மட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது

வியாழக்கிழமை, 30 ஜூன் 2016      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்  - கேரளாவில் வரும் ஆகஸ்ட் மாதம் 1-தேதி முதல் இரு சக்கர பயன்படுத்துவோர் ஹெல்மட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்படாது என்று அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து போக்குவரத்து ஆணையர் தோமின் தச்சன்கரி கூறியதாவது: நாங்கள் பெட்ரோல் விநியோகஸ்தர்களிடம் இது தொடர்பாக பேச்சு நடத்தினோம்.

இந்த ஆலோசனைக்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக வரும் ஆகஸ்ட் மாதம் 1-ம்தேதி முதல் இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவோர் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என அம்மாநில அரசு முடிவு செய்தது. முதல்கட்டமாக திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய மூன்று நகரங்களில் மட்டும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். மேலும் இது விரிவு படுத்தப்படும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்