முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேவிஸ் கோப்பை ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் போபண்ணா வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

சண்டிகர் : சண்டிகரில் நடக்கும் டேவிஸ் கோப்பை ஆசியா ஓசியானா குரூப் டென்னிஸ் போட்டியில் நடந்த ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா வெற்றி பெற்றார். அவர் கொரியா வீரர் ஹாங்  சங்கை தோற்கடித்தார் . மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் கொரிய வீரர் யங் கியூ லிம் இந்திய வீரர் ராம் குமார் ராமநாதனை தோற்கடித்தார். இந்திய அணி இந்த  போட்டியை 4-1 ஆட்ட கணக்கில் வென்றது.

சண்டிகரில் இந்தியா-கொரியா இடையேயான ஆசிய ஓசியானா குரூப் 1 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடந்தது.  இதில் நேற்று நடந்த ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா 3-6, 6-4, 6-4 செட் கணக்கில் கொரிய வீரர் ஹாங் சங்கை தோற்கடித்தார் . போபண்ணா முதல் செட்டை இழந்தபோதும் அடுத்தடுத்த செட்களில் அபாரமாக ஆடி தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.தோல்வியை தழுவிய சங் டென்னிஸ் வீரர்கள் தர வரிசையில் 655வது இடத்தில் இருப்பவர்  ஆவார்.

போபண்ணாவிற்கு டேவிஸ் கோப்பை போட்டியில், நேற்று 10வது வெற்றி கிடைத்துள்ளது.   இந்திய அணி சனிக்கிழமை நடந்த இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு போபண்ணா உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

போபண்ணா இதற்கு முன்னர் கடந்த2012ம் ஆண்டு நடந்த டேவிஸ் கோப்பை ஒற்றையர் போட்டியில் இந்திய அணியில் ஆடினார். அப்போது  உஸ்பெகிஸ்தான் வீரர்  சர்வர் இக்ரமோவை தோற்கடித்தார்.

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில், இந்திய வீரர் ராம் குமார் 3-6, 6-4, 6-7 செட்கணக்கில் கொரிய வீரர் லிம்மிடம் தோல்வியைத்தழுவினார். ராம் குமார் டென்னிஸ் வீரர்கள் தர வரிசை பட்டியலில் 227வது இடத்தில் இருப்பவர். லிம்  409வது இடத்தில் இருக்கும் வீரர் ஆவார்.

கொரிய அணியுடன் ஆடிய ஆசிய ஓசியானா போட்டியில்  இந்திய அணி 4-1 ஆட்ட கணக்கில் வெற்றி வாகை சூடியுள்ளது. இருப்பினும் இந்திய அணிக்கு கொரிய அணி பெரும் சவாலை தந்தது.

இந்திய அணி இதற்கு முன்னர் 2011ம் ஆண்டு உலக குரூப் போட்டியில் ஆடியது ..அப்போது இந்திய அணி செர்பிய அணியிடம் முதல் சுற்றில் தோல்வியை தழுவியது. அதன் பின்னர்  நடந்த பிளே ஆப் போட்டிகளில் செர்பியாவிடமும்( பெங்களுரூ 2014) செக் குடியரசு (2015 புதுடெல்லி) ஆகியவற்றில் இந்தியா தோல்வியை தழுவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்