முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல்: ஷெரீப் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

லாகூர்  - இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 13 ஆயிரத்து 300 சதுர கி.மீ. பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியாக உள்ளது. தற்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதி சுயாட்சி மாநிலமாக இருக்கிறது. இங்குள்ள மொத்த உள்ள 40 தொகுதிகளுக்கு சட்ட மன்ற தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் மூன்று இரண்டு பங்கு இடங்களை நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி பெற்றுள்ளது. 40 தொகுதிகளில் 26 அரசியல் கட்சிகள் சார்பில் 423 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருப்பினும்  இம்ரான் கான் கட்சி பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸ் ஷெரீப் தலைமையிலான கட்சி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையேதான் போட்டி நிலவியது. இதில் 30 இடங்களை  நவாஸ் ஷெரீப் கட்சி வென்றுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 25 லட்சத்திற்கும் அதிகமான ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தனியாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் செயல்படுகிறது. இருப்பினும் அவை பாகிஸ்தான் அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியை பாகிஸ்தானில் ‘ஆசாத் காஷ்மீர் (சுதந்திரம் பெற்ற காஷ்மீர்) என அழைக்கின்றனர். இந்தியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்