முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளர் கெய்னி

திங்கட்கிழமை, 25 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

நியூயார்க்  - அமெரிக்காவில் ஆளும் ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளராக வெர்ஜினியா செனட்டர் டிம் கெய்னி (58) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அந்த கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக வெர்ஜினியா செனட்டர் டிம் கெய்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை ஹிலாரி கிளிண்டன் வாஷிங்டனில் வெளியிட்டார். இதுகுறித்து அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர் கூறியபோது, ஹிலாரியும் கெய்னியும் இந்தியாவின் தீவிர ஆதரவாளர்கள் என்று தெரிவித்தனர். குடியரசு கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிபர் வேட்பாளராகவும் இன்டி யானா மாகாண ஆளுநர் மைக் பென்ஸ் துணை அதிபர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்