முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பிக்கள் நிதி குறித்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் லோக்சபையில் கூச்சல்

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, எம்.பிக்கள் நிதி அதிகரிக்கப்படாதது குறித்து  லோக்சபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல் போட்டார்கள். இந்த அமளி சில நிமிடம் நீடித்தது. இதுகுறித்து  அரசு பதிலளிக்க வேண்டும் என அ.தி.மு.கவின் எம்.பியும்அவை கமிட்டியின் தலைவருமான  தம்பிதுரை தெரிவித்தார்.

 பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி  மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதக்களை நிறைவேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் ஆதரவை அரசு கோரியது. இந்த நிலையில் லோக்சபையில் அவை கமிட்டி உத்தேசித்த படி, எம்.பிக்கள் நிதியை ஏன் உயர்த்த வில்லை என்று காங்கிரஸ் எம்.பிக்கள் நேற்று கூச்சல் போட்டார்கள். இந்த கூச்சல் சில நிமிடம் நீடித்தது.

இது குறித்து ,துணை சபா நாயகரும் அவைக்கமிட்டி தலைவருமான  தம்பி துரை  கூறுகையில் எம்.பிக்கள் நிதியை அதிகரிக்க மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளோம். இது குறித்து அரசுதான் பதிலளிக்க வேண்டும் என்றார்.

 அவைக்கமிட்டியின் 5வது அறிக்கையை சமர்பிக்க தம்பி துரை எழுந்த போது காங்கிரஸ் எம்.பி  கே.சி வேணுகோபால் எழுந்து இந்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய காரணம் என்ன ? எம்.பிக்கள் நிதி உயர்த்தப்படவில்லையே என கேள்வி எழுப்பிய நிலையில் அவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சலில் ஈடுபட்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்