முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக ஹிலாரி அறிவிப்பு

புதன்கிழமை, 27 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் -  ஜனநாயக  கட்சியின் வேட்பாளர்   பதவிக்கு முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன், செனட் உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் இடையே கடும்  போட்டி நிலவியது. முடிவில் கூடுதல் புள்ளிகள் பெற்று ஹிலாரி கிளிண்டன்  வெற்றி பெற்றார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது.  அதற்கான வேட்பாளர் தேர்வு நடந்தது. அதற்கான தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக டொனால்டு  டிரம்ப் அறிவிக்கப்பட்டார். ஜனநாயக கட்சியின் மாநாடு பிளா டெல்பியாவில் நடந்தது.  அதில், ஹிலாரி கிளிண்டன்  அதிகாரப்பூர்வ வேட்பாளராக   அறிவிக்கப்பட்டார்.

அவரது பெயரை இவரை எதிர்த்து  போட்டியிட்டு 2-வது இடம்  பிடித்த பெர்னி சாண்டர்ஸ் ஆயிரக் கணக்கானோர் கை தட்டல்களுக்கு   இடையே முன் மொழிந்தார். இதன் மூலம் 240 ஆண்டு  கால அமெரிக்க வரலாற்றில் அதிபர் தேர்தலில் போட்டி யிடும் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமையை அவர்  பெற்றுள்ளார். அமெரிக்காவில் 1920-ம் ஆண்டுதான்  பெண்கள் தேர்தலில்  போட்டியிட உரிமை கொடுத்து 19-வது பிரிவில்  சட்டதிருத்தம் செய்யப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்