முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் நாங்கள்தான் வன்முறையை தூண்டினோம் : பயங்கரவாதி ஹபீஸ் சயீது ஒப்புதல்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  - காஷ்மீரில் நாங்கள்தான் வன்முறையை தூண்டிவிட்டோம் என்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சயீது கூறிஉள்ளான்.  காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானியும், அவரது கூட்டாளிகளும் பாதுகாப்பு படையினரால் 9-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து சுமார் 18-நாட்கள் அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். மேலும் பாதுகாப்பு படையினர் உள்பட காயமடைந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டிவிடுவது பாகிஸ்தான்தான் என்று இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது. 

இந்நிலையில் இந்தியாவின் குற்றச்சாட்டை உறுதிசெய்யும் வகையில் காஷ்மீரில் நாங்கள்தான் வன்முறையை தூண்டிவிட்டோம் என்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சயீது கூறிஉள்ளான். பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியே என்று பயங்கரவாதி ஹபீஸ் சயீது கூறிஉள்ளதாக செய்திவெளியிட்டு உள்ளது.

பாகிஸ்தான் மனித உரிமைகள் என்று முதலைக் கண்ணீர் வடிக்கும் நிலையில் வன்முறையை தூண்டிவிட்டதே நாங்கள்தான் என்று பாகிஸ்தானின் ராணுவம், ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு வளர்த்துவரும் பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பா ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளது. காஷ்மீரிகளுக்கு ஆதரவாக நிற்கிறோம் என்று சர்வதேச அளவில் சென்று கபட நாடகம் ஆடிய பாகிஸ்தானின் முகத்திரையை ஹபீஸ் சயீத்தின் விளக்கமானது கிழித்துவிட்டது. மற்றொரு புறம் காஷ்மீரில் இந்தியாவிற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானின் பயங்கரவாத குழுவிற்கு தொடர்பு உள்ளதை உறுதிசெய்து உள்ளது.

பைசாலாபாத்தை (பாகிஸ்தான்) சேர்ந்த பலர் காஷ்மீருக்கு சென்றனர், அவர்களில் பலர் தங்களுடைய உயிரை தியாகம் செய்து உள்ளனர் என்றும் ஹபீஸ் சயீது கூறிஉள்ளான். காஷ்மீர் என்றாவது ஒருநாள், பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியதை குறிப்பிட்டு பேசிஉள்ள ஹபீஸ் சயீது, “ஒருநாள் இந்தியா பிரிவதை உலகம் பார்க்கும்,” என்று கூறிஉள்ளான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்