முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குளச்சல் துறைமுக திட்டம் கண்டிப்பாக நிறைவேறும் : பிரதமர் நரேந்திர மோடி உறுதி

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - தமிழகத்தில், குளச்சல் துறைமுகம் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குளச்சல் துறைமுகம் அமைக்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதற்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, கேரள சட்டப்பேரவையில் குளச்சல் துறைமுகம் அமைப்பதற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குளச்சல் துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான குழு பிரதமர் மோடியை நேற்று சந்தித்தது. கேரள மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அக் குழுவில் இடம் பெற்று இருந்தனர்.  நாடாளுமன்ற வளாகத்தில் இந்த குழு பிரதமரை சந்தித்தது. அப்போது, பினராயி விஜயனின் கோரிக்கையை உரிய முறையில் கேட்ட பிரதமர், குளச்சல் துறைமுக திட்டத்தை கைவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் என்றார்.

பிரதமரை சந்தித்த பின் மேற்கண்ட தகவலை பினராயி விஜயன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், குளச்சலில் அமையவுள்ள துறைமுக பணிகளை நிறுத்த முடியாது என்று பிரதமர் தெரிவித்துவிட்டார். இரண்டு துறைமுகங்களும் அருகருகே அமைந்தால் போட்டியும் வருவாயும் அதிகரிக்கும் என  பிரதமர் தெரிவித்தார். 2 துறைமுகங்களின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் பிரதமர் கூறினார்” என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்