முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்சில் மேலும் தாக்குதல் நடத்துவோம்: புதிய வீடியோவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

பாரிஸ்  - பிரான்ஸ் நாட்டில் பாதிரியாரை கொன்றதாக சுட்டுக் கொல்லப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதி அந்நாட்டு அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேவுக்கு மிரட்டல் விடுத்த வீடியோவை தற்போது ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் ரூயன் நகருக்கு அருகேயுள்ள செயிண்ட் எடின்னே டு ரவ்ரே என்ற இடத்தில் ஒரு தேவாலயம் உள்ளது. கடந்த 26-ம் தேதி இந்த தேவாலயத்துக்குள் 2 பேர் ஆயுதங்களுடன் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த பாதிரியார், கன்னியாஸ்திரிகள், பக்தர்கள் என 6 பேரை பணயக்கைதிகளாக சிறை பிடித்தனர். தகவல் அறிந்து போலீசார் விரைந்ததும், அங்கிருந்த ஒரு பாதிரியாரின் கழுத்தை அறுத்து தீவிரவாதிகள் கொன்றனர். அதன்பின்னர் தீவிரவாதிகள் இருவரையும் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பிண்ணனியில் இருந்தது யார்? என்பது தெரியாமல் இருந்த நிலையில், இந்த படுகொலைக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். இந்நிலையில், இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டு போலீசாரல் சுட்டுக் கொல்லப்பவர்களில் ஒரு தீவிரவாதியின் பெயர் அப்டெல் மாலிக் நபில் பெட்டிட்ஜீன் என்பது தெரிய வந்துள்ளது. தேவாலய தாக்குதலுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே, பிரதமர் மேனுவேல் வால்ஸ் ஆகியோருக்கு இவன் பேசி அனுப்பியிருந்த மிரட்டல் வீடியோவை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் அவன் விடுத்துள்ள மிரட்டல் செய்தியில் ‘காலங்கள் மாறி விட்டது, எங்கள் சகோதர-சகோதரிகள் படும் வேதனையை நீங்களும் அனுபவிப்பீர்கள். மேலும் தாக்குதல் நடத்துவோம். உங்கள் நாட்டை நாங்கள் அழிக்கப் போகிறோம்’ என தெரிவித்துள்ளான். மேலும், சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு படைகளை அனுப்பியுள்ள நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் அனைவரும் கையில் கத்தியுடன் சென்று எதிர்படுவோரை எல்லாம் குத்திக் கொல்லுங்கள் என்றும் அப்டெல் மாலிக் நபில் பெட்டிட்ஜீன் அந்த வீடியோவில் கூறியுள்ளான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்