முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று கூறவில்லை : சுப்ரீம்கோர்ட்டில் ராகுல் காந்தி விளக்கம்

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  மகாத்மா காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று கூறவில்லை என்றும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர் காந்தியின் கொலைக்குப் பொறுப்பு என்றுதான் கூறியதாகவும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ராகுல் காந்திக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகளை ரத்து செய்யக்கோரும் மனு நேற்று சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாரிமன் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று கூறவில்லை, கொன்றவர் அந்த அமைப்புடன் தொடர்புடையவர் என்றுதான் கூறினேன் என்று ராகுல் காந்தி மும்பை ஐகோர்ட்டில் கூறியதை இறுதியான, பதிவு செய்யக்கூடிய வாக்குமூலமாக புகார் அளித்தவர்கள் ஏற்றுக் கொண்டால் மனுவைத் தள்ளுபடி செய்வோம் என்றனர்.

வழக்கை செப்டம்பர் 1-ம் தேதிக்கு தள்ளி வைத்த சுப்ரீம்கோர்ட் அவதூறு வழக்கு தொடர்ந்தவர்கள் ராகுல் காந்தியின் சமாதானத்தை ஏற்கிறார்களா என்று கேட்டு பதில் அளிக்குமாறு புகார்தாரர்களின் வழக்கறிஞரான யு.ஆர்.லலித் கேட்டு சுப்ரீம்கோர்ட்டுக்கு தகவல் சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்