முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவால் இயல்பு வாழ்க்கை இழந்து தவிக்கும் மக்கள்

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,  காஷ்மீரில் கடந்த ஒன்றரை மாதமாக கடைபிடிக்கப்படும் ஊரடங்கு உத்தரவு இரவு நேரத்தில் தொடரும் போது அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பரிதாபமாக ஆகியுள்ளது.

 காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 8ம் தேதியன்று டிரால் பகுதியை சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி புர்கான் வானி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து, பிரிவினை வாதிகள் வன்முறை போராட்டத்திலும், வேலை நிறுத்தத்திலும் ஈடுபடுகிறார்கள்.

இதனால் அங்கு கடந்த 48 நாட்களாக மாநில தலைநகர் ஸ்ரீநகர் உள்பட பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் அன்றாட பணிகளிலும் முடங்கியுள்ளன. பள்ளிகள், கடைகள், தனியார் அலுவலகங்கள் ஆகியவை செயல்படாத நிலை காணப்படுகிறது. இதனால் அந்த பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த இரு மாதங்களில் ரூ 6ஆயிரத்து 400 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநில தலைநகர் ஸ்ரீநகரில் இரவு நேரத்தில் யாரேனும் சாலையில் நடமாடினால், இருட்டில் இருந்து வரும் குரல் எதிரே வருபவரை எச்சரிக்கும் விதமாக மிரட்டுகிறது. இங்கிருந்து போய் விடுங்கள் என்று ஒலிபெருக்கியில் எச்சரிக்கை குரல் வருகிறது.

இரவு நேரத்தில் வயதானவர்கள் வயோதிகம் காரணமாக வரும் நோய்களால் அவதிப்படும் போது அவர்களுக்கு இரவு நேரத்தில் மருந்து வாங்க முடிவதில்லை. இரவு நேரத்தில் லத்திகள், கற்கள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பெட்ரோல் , கெரசின் ஆகியவற்றுடன் வன்முறையில் இளைஞர்கள் ஈபடுகிறார்கள். அந்த இளைஞர்கள் பிரிவினை வாதிகளால் தூண்டிவிடப்பட்டு வன்முறையில் இறங்குகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்