முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், நடால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க்  - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் மற்றும் ரபெல் நடால் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. நடப்பு சாம்பியனும், உலகின் முதல்நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா), முதல் சுற்றில் போலந்து வீரர் ஜெர்சி ஜானோவிச்சை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-3, 5-7, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 4-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) முதல் சுற்றில் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணககில் உஸ்பெகிஸ்தான் வீரர் டென்ஸ் இஸ்டோமினை வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் ராபர்ட் வின்சி (இத்தாலி), சிலிச் (குரோஷியா), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), சோங்கா (பிரான்ஸ்), ரோனிக் (கனடா) ஆகிய முன்னணி வீரர்கள் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் 3-ம் நிலை வீராங்கனையான முகுருஜா (ஸ்பெயின்) 2-6, 6-0, 6-3 என்ற கணக்கில் மெர்டன்சை (பெல்ஜியம்) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இரண்டாம் நிலை வீராங்கனையான கெர்பர் (ஜெர்மனி) 6-0, 1-0 என்ற கணக்கில் பொலோனோவுக்கு (சுலோவாக்கியா) எதிராக முன்னிலையில் இருந்தபோது பொலோனோ காயத்தால் விலகினார். இதனால் முகுருஜா வென்றதாக அறிவிக்கப்பட்டது.
கேஸ்கியூட் அதிர்ச்சி தோல்வி:

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கேஸ்கியூட் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை ராபர்ட்டா வின்சி 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அன்ன லெனா பிரைட்சமை (ஜெர்மனி) விரட்டியடித்து வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 4-6, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் டவுன்சென்ட்டை போராடி சாய்த்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 84-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் கைல் எட்மன்ட் 6-2, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தரவரிசையில் 15-வது இடம் வகிக்கும் பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கியூட்டுக்கு அதிர்ச்சி அளித்தார். முன்னாள் சாம்பியன் மரின் சிலிச் (குரோஷியா) தன்னை எதிர்த்த டுட்ரா சில்வாவை (பிரேசில்) 6-4, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வெளியேற்றினார்.

ஒலிம்பிக் சாம்பியன் மோனிகா புய்க் தோல்வி:அமெரிக்க ஓபனில் ரியோ ஒலிம்பிக் சாம்பியன் போர்ட்டோரிகாவின் மோனிகா புய்க்கை முதல் சுற்றோடு வெளியேற்றினார் சீன வீராங்கனை. ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் போட்டியில் போர்ட்டோரிகாவின் மோனிகாக புய்க், முன்னணி வீராங்கனைகளான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), பெட்ரா குவிட்டோவா (செக் குடியரசு) ஆகியோரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இந்த உற்சாகத்துடன் யு.எஸ். ஓபனில் கலந்து கொண்டார். அமெரிக்க ஓபனின் முதல் சுற்றில் மோனிகா சீனாவின் ஷெங் சாய்சாய்-ஐ எதிர்கொண்டார்.

இதில் சீனா வீராங்கனை ஷெங் அபாரமாக விளையாடி 6-4, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று தரவரிசையில் 32-வது இடத்தில் இருக்கும் போர்ட்டோரிகாவின் மோனிகா புய்க்கை வீழ்த்தி முதல் சுற்றோடு வெளியேற்றினார். இதனால் எதிர்பார்ப்புகளுடன் கலந்து கொண்ட மோனிகாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. சீன வீராங்கனை ஷெங் சாய்சாய் 2-வது சுற்றில் உக்ரைனின் கட்டேரினாவை எதிர்கொள்கிறார். தோல்வி குறித்து மோனிகா புய்க் கூறுகையில் ‘‘ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று, இங்கு வரும்போது ஏராளமான நெருக்கடி, எதிர்பார்ப்புகளால் கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால், என்னால் தொடர்ந்து கற்றுக்கொள்ள முடியும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்