முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்தால் 50ஆயிரம் உயிர்களை இழந்த பாகிஸ்தான் : தீவிரவாதிகளுக்கு புகலிடம் தருவதை நிறுத்த வேண்டும்: கெர்ரி

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி -  3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் தருவதை நிறுத்த வேண்டும் என  கூறினார்.  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி  3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையே ராஜிய மற்றும் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அவர்  இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஜான் கெர்ரியும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூவும் பாகிஸ்தானில் தீவிரவாதம் உருவெடுத்து வருவது குறித்து நேற்று முன்தினம் விவாதித்தனர். இதன் பின்னர் ஜான் கெர்ரி பழைய டெல்லியில் உள்ள 3 புனிதலங்களுக்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் கன மழை காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும் அவர் நேற்று டெல்லியில் ஐ.ஐடியில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, தீவிரவாதத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ள நாடு ஆகும், அந்த நாடு தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை நிறுத்த வேண்டும். அந்த நாட்டில்  தீவிரவாதத்தால் 50ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள்.  பாகிஸ்தான் தீவிரவாதிகளால், இந்தியா-பாகிஸ்தான் உறவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் அமைதி மேம்பாடு நடவடிக்கையும் பாதிக்கிறது.

 முன்னணி நாடுகள் , எல்லை பகுதி தீவிரவாதத்தை நீண்ட காலம் பொறுத்துக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி தனது பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பிற்கு  அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று நவாசும் டெல்லி வந்தார். இது பாராட்டத்தக்கது. இதனால் இரு தரப்பு இடையே தொடர்பு நல்ல முறையில் அமைந்தது. வறுமை மற்றும் தீவிரவாத சவால்களை தீர்வு காண்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்