முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுன்ட் டவுன் தொடங்கியது: 8 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி - சி35 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து 8 செயற்கைக்கோள்களுடன் இன்று காலை விண்ணில் செலுத்தப்படும் பி.எஸ்.எல்.வி-சி35 ராக்கெட் பயணத்துக்கான கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய ராக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரே பயணத்தில் இருவிதமான சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தப்பட உள்ளன.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) கட்டுப் பாட்டில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டா வில் உள்ளது. இங்குள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட் இன்று (26-ம் தேதி) காலை 9.12 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 48 மணி நேர கவுன்ட் டவுன் சனிக்கிழமை காலை தொடங்கியது.

பி.எஸ்.எல்.வி - சி35 ராக்கெட்டில் பருவநிலை தொடர் பான ஆய்வுக்காக 371 கிலோ எடையுள்ள ‘ஸ்காட்சாட்-1’ என்ற செயற்கைக் கோள் அனுப்பப்படுகிறது. இதுதவிர அல்ஜீரியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தயாரித்துள்ள 5 செயற்கைக் கோள்கள், மும்பை ஐ.ஐ.டி உருவாக்கியுள்ள ‘பிரதம்’, பெங்களூரு பி.இ.எஸ் பல்கலைக்கழகம் உருவாக்கி யுள்ள ‘பிசாட்’ செயற்கைக் கோள் ஆகியவையும் அனுப்பப்படு கின்றன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்