முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சித்தேர்தலில் 76 ஆயிரம் எல்க்ட்ரானிக் இயந்திரங்கள் பயன்படுத்த நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : நகர்ப் பகுதிகளில் வாக்குப்பதிவிற்கு 34.515 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 41.418 மின்னணு வாக்குப்பதிவு கருவிகளும் ஆக மொத்தம் 75.933 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இதில் ஒடிசா மாநிலத்திலிருந்து 12000 மின்னணு வாக்குப்பதிவு  கருவிகள் தமிழ்நாட்டிற்கு தற்போது வந்து சேர்ந்துள்ளன. கடந்த 26 முதல் 20 மாவட்டங்களில் 42610 மின்னணு  கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு  கருவிகள் ஆகியன முதல் கட்ட பரிசோதனை பாரத் மின்னணு லிமிடெட்  நிறுவனப் பொறியாளர்களால் முடிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் எஞ்சிய 12 மாவட்டங்களிலும் முதற்கட்ட பரிசோதனை பணி துவங்குகிறது. நடைபெற இத்தேர்தலில் வாக்குப்பதிவிற்கு ஊரக பகுதிகளில் 2,17,500 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

இதில், ஆந்திர மாநிலத்திலிருந்து 6000 ஜம்போ சைஸ் வாக்குப்பெட்டிகள்  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முலம் புறப்பட்டு நேற்று பணியை தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி,  அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், காஞ்சிபும் மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களுக்கு இவ்வாக்குப் பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன இத்தகவலை மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்