முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, சார்க் மாநாட்டை புறக்கணிக்க இந்தியா முடிவு : வெளியுறவுத் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, 'சார்க்' எனப்படும், தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக, இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.  ஜம்மு - காஷ்மீர் மாநிலம், உரி ராணுவ முகாமில், கடந்த 18-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இந்தியா - பாக்., இடையிலான நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், துாதரக அதிகாரி அப்துல் பாஷித்தை, இந்திய வெளியுறவு செயலர் ஜெய்சங்கர், தன் அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்களை அளித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானை அனைத்து வகையான ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தனிமைப்படுத்துவது மற்றும் புறக்கணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவதுடன் உலக நாடுகளையும் வலியுறுத்தி வருகிறது. அதன் ஒரு முயற்சியாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள 19-வது சார்க் மாநாட்டை புறக்கணிக்க, இந்தியா முடிவு செய்துள்ளதாகவும், அந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்றும், வெளியுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூட்டான் பிரதமர் உள்ளிட்டோரும் இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்