முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: முதல் நாளில் இந்திய அணி திணறல்

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா - கொல்கத்தாவில் நேற்று தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான  2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தியது. பின் நியூசிலாந்து வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை எடுத்தது. இந்த போட்டி இந்தியாவில் நடைபெறும் 250-வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் கான்பூரில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டி இந்திய கிரிக்கெட் அணியின் 500-வது டெஸ்ட் போட்டி  ஆகும்.

இதையடுத்து, இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முன்னதாக, இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுலுக்குப் பதில் ஷிகர் தவானும், உமேஷ் யாதவுக்கு பதில் புவனேஷ்வர் குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் டெஸ்டை போலவே 4 பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்கியது.

அதேபோல், நியூசிலாந்து அணியில் சிறிது மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, கேப்டன் பொறுப்பு டெய்லருக்கு வழங்கப்பட்டது. வில்லியம்சன் இடத்தில் ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கலாம். அந்த அணியில் மார்க்கிரேக், ஜோதி ஆகியோருக்கு பதில் ஜிதன் பட்டேல், மெட் ஹென்றி ஆடும் லெவனில் இடம் பெற்றனர்.
இந்திய வீரர்கள் விவரம் :–
முரளிவிஜய், ஷிகர் தவான், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா , அஸ்வின், விருத்திமான் சஹா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, புவனேஷ் குமார்
நியூசிலாந்து வீரர்கள் விவரம் :–
டாம் லாதம், மார்ட்டின் கப்தில்,  ஹென்றி நிகோல்ஸ், ராஸ் டெய்லர், மிட்செல் சான்ட்னெர், வாட்லிங், ஜீத்தன் பட்டேல் , நீல் வாக்னெர், டிரென்ட் பவுல்ட். ஹென்றி.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி துவக்க வீரர்களாக ஷிகர் தவான், முரளி விஜய் களமிறங்கினர். தவான் ஒரு ரன்னில்  மட்டுமே எடுத்த நிலையில், ஹென்றியிடம் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் முரளி விஜயுடன் புஜாரா இணைந்து நிதானமாக விளையாடினார். ஆனால், மறுமுனையில் முரளி விஜய் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து புஜாராவுடன் கேப்டன் கோலி இணைந்துள்ளார்.
காம்பீர் இடம் பெறவில்லை
சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக கருதப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் மீண்டும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் நேற்று தொடங்கிய 2-ம் டெஸ்ட் போட்டியின் 11 பேர் அடங்கிய இந்திய வீரர்கள் அணியில், கவுதம் கம்பீரின் பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக சிகர் தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆல்ரவுண்டர் ஜயந்த் யாதவ் பெயரும் இடம்பெறவில்லை. நேற்றைய போட்டியில் உமேஷ் யாதவ்-க்கு பதிலாக புவனேஷ்வர் குமார் இடம்பெற்றார்.
ஈடன்கார்டனில் மணியோசை
கொல்கத்தா மைதானத்தில் புதிதாக வெள்ளி முலாம் பூசப்பட்ட பெரிய மணி ஒன்று இங்கு பொருத்தப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் நேற்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இது இந்திய அணி உள்ளூரில் விளையாடும் 250-வது டெஸ்ட் போட்டியாகும். இதையொட்டி இரு அணி வீரர்களையும் கவுரவிக்க பெங்கால் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

அத்துடன் லண்டன் லார்ட்ஸ் மைதானம் போன்று புதிதாக வெள்ளி முலாம் பூசப்பட்ட பெரிய மணி ஒன்று இங்கு பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் போட்டி தொடங்குவதை குறிக்கும் வகையில் மணியோசை எழுப்பப்படும். நேற்று முதல் நாளில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மணியடித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்