முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் நாள் வசூலில் சாதனை படைத்த தோனி படம்!

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2016      சினிமா
Image Unavailable

மும்பை : தோனி படத்துக்கு உலகமெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அது முதல்நாள் வசூலில் பிரதிபலித்துள்ளது.

இந்திய அணி கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார். இயக்கம் - நீரஜ் பாண்டே. இந்தப் படம், செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது.

60 நாடுகளில், 45000 திரையரங்குகளில் வெளியான தோனி படம், முதல் நாளன்று ரூ. 21 கோடியை வசூலித்துள்ளது. பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த தாரன் ஆதர்ஷ் ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்ததாவது: வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் அதிக முதல் நாள் வசூல் தோனி படத்துக்குக் கிடைத்துள்ளது. 2016-ல் அதிக முதல்நாள் வசூல் கண்ட படங்களில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது என்று கூறியுள்ளார்.

இந்தச் சாதனைப் பட்டியலில், முதல் நாளில் 36.54 கோடி வசூலித்த சுல்தான் படம் முதலிடத்தில் உள்ளது. தோனி படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்துள்ளதால் அடுத்த இருநாள்களில் அதிக வசூல் கிடைத்து மேலும் பல சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்