முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு வங்கிக்காக ஹெச்-1பி விசா விவகாரத்தை கையிலெடுக்கும் டொனால்டு டிரம்ப்

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - ஹெச் 1-பி விசா, அவுட்சோர்சிங் ஆகிய இரண்டு விஷயங்களை தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய அம்சங்களாகப் பயன்படுத்தி வரும் அமெரிக்காவின் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீண்டும் அவைகுறித்துப் பேசியுள்ளார். சின்சினாட்டி, ஓஹியோவில்தன் ஆதரவாளர்கள் மத்தியில் ட்ரம்ப் பேசியதாவது:அமெரிக்காவிலுள்ள தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு வேலை கிடைக்காது என எண்ணிக் கவலைப்படுகின்றனர். அவர்களின் கவலை நியாயமானது. வேலைகளை அயல்பணிகள் (அவுட்சோர்சிங்) மூலம் மேற்கொள்வது மிகப்பெரிய அச்சுறுத்தல்.

கல்லூரி முடித்த மாணவர்கள் வேலைக்காக வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதேசமயம் நிறுவஙனகள், ஹெச்-1பி விசா மூலம் குறைந்த ஊதியத்துக்கு ஆட்களை வெளிநாட்டிலிருந்து தருவித்து, அமெரிக்க இளைஞர்களின் வேலையைப் பறிக்கின்றனர்.அமெரிக்க மக்களுக்கான வேலைவாய்ப்பை நாங்கள் பாதுகாப்போம். பட்டப்படிப்பு முடித்த அமெரிக்கர்கள் அல்லது முடிக்க இருக்கும் அமெரிக்கர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைப்பதை எனது நிர்வாகம் உறுதி செய்யும்.

வரி, வர்த்தக ஒழுங்குமுறை, எரிசக்தி சீரமைப்பு உள்ளிட்ட எனது பொருளாதார திட்டங்கள் 2.5 கோடி புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும். தனியார் நிறுவனங்கள் ஆண்டுக்கு 4 சதவீத அளவுக்கு வளர்ச்சி பெற வகை செய்யப்படும். உபேர் போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்