முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சரவை கூட்டங்களில் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - சைபர் பாதுகாப்பு  எச்சரிக்கையை எதிர்கொள்ள மத்திய அமைச்சரவை கூட்டங்களில் செல்ஃபோன் பயன்படுத்த பிரதமர் அலுவலகம் தடை விதித்துள்ளது.  அமைச்சரவை கூட்டம் நடைபெறும் இடத்திற்கு இனி செல்ஃபோன்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன், சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் உளவுத்துறைகளால், தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதால், முக்கிய துறைகளில் பணியாற்றுபவர்கள் தங்களுடைய செல்ஃபோன்களை அரசு கம்ப்யூட்டர்கள் மற்றும் மடிக்கணினிகளில் இணைக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகங்களிலும் செல்ஃபோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளில் அமைச்சரவை கூட்டங்களின் போது செல்ஃபோன்கள் எடுத்துச்செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்