முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முலாயம் சிங் குடும்பம் போல பீகாரில் லல்லு பிரசாத் குடும்பத்தில் மோதல் முற்றுகிறது

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

பாட்னா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ் வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் குடும்பத்தில் மோதல் முற்றியுள்ளதைப்போல பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் (ஆர்.ஜே.டி) லல்லு பிரசாத் யாதவ் குடும்பத்தில் மோதல் முற்றுகிறது.

 அந்த மோதல் பொது மக்களுக்கு வெளிப்படையாக எந்த நேரத்திலும் வெடிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. பீகாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் ,ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அந்த கூட்டணி அரசில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். ஆர்.ஜே.டி.கட்சியின் தலைவரும் , லல்லு பிரசாத் யாதவின் இளைய மகனுமான தேஜஸ்வி துணை முதல்வராக  உள்ளார்.

இது குறித்து பீகார் மாநில பா.ஜ.க.மூத்த தலைவர் சுசில் குமார் மோடி கூறியதாவது,

மூத்த மகன் தேஜ் பிரதாப்புக்கு பதிலாக தனது இளைய மகன் தேஜஸ்வியை துணை முதல்வராக லல்லு பிரசாத் யாதவ் ஆக்கியுள்ளார். இதனால்,  அவரது குடும்பத்திற்குள்ளேயே மோதல் நடந்து வருகிறது. இந்த மோதல் வெளி உலகிற்கு விரைவில் தெரிய வரும் .

இவ்வாறு பீகார் மாநில பா.ஜ.க தலைவர் சுசில் குமார் மோடி கூறினார்.

லல்லு பிரசாத் யாதவின்  மகள் மணிப்பூர் எம்.பி. தேஜ் பிரதாப் சிங் யாதவை திருமணம் செய்துள்ளார். அவர் முலாயம்சிங் யாதவின் பேரன் ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்