முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் உளவு சதியில் தொடர்புடைய ஜோத்பூர் விசா ஏஜென்ட் கைது

வெள்ளிக்கிழமை, 28 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  இந்திய ராணுவ தகவல்ளை உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக அதிகாரியின் சதி வேலையில் தொடர்புடைய ஜோத்பூர் ஏஜென்ட் சோயப்பை போலீசார் கைது செய்தார்கள்.  இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரர்கள் பற்றிய தகவல்கள் இந்திய நிலைகள் குறித்த தகவல்கை ரகசியமாக திரட்டி விற்கும் பணியில்   மவுலானா ரம்சான் மற்றும் சுபாஷ் ஜான்கிர் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெகமூது அக்தரிடம் தகவல்களை விற்றுள்ளனர்.

இந்த உளவு சதி வேலையில் ஜோத்பூரை சேர்ந்த விசா ஏஜென்ட் சோயப்பை போலீசார் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அவர் உளவு வேலை பார்த்த மவுலானாவை சந்தித்து அதிக அளவில் பணம் தருவதாக உளவு வேலையில் ஈடுபடுத்தினார். உளவு வேலையில் ஈடுபட்ட மவுலானாவும் , சுபாஷீம் 12 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்