முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு - திருப்பதி கோயிலில் பத்தே நாட்களில் 30 கோடி ரூபாய் காணிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை : பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவி வரும் போதிலும், புகழ்பெற்ற திருப்பதி கோயில் உண்டியல் வசூலில் எவ்வித பாதிப்புமின்றி கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 30 கோடி ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற திருப்பதி திருமலை கோயிலுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனால், நாழு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ஆனாலும், திருப்பதி கோயில் உண்டியல் வசூலில் எவ்வித பாதிப்பும் இன்றி, கடந்த 10 நாட்களில் மட்டும் 30 கோடியே 36 லட்சம் ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலான காணிக்கையான விட 8 கோடி ரூபாய் அதிகம் என கோயிலின் மக்கள் தொடர்பு அதிகாரி தாலரி ரவி தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக கடந்த 17-ம் தேதி 3 கோடியே 53 லட்சம் ரூபாய் உண்டியலில் வசூல் ஆனதாக குறிப்பிட்டுள்ள அவர், தற்போது புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளையும் அதிக அளவில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்