முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல இயக்குனர் கே. சுபாஷ் சென்னையில் காலமானார்

புதன்கிழமை, 23 நவம்பர் 2016      சினிமா
Image Unavailable

சென்னை, பிரபல இயக்குனர் கே. சுபாஷ் சென்னையில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை அவரது இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

பிரபல இயக்குநர் கே.சுபாஷ் இன்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 57. கே.சுபாஷ் தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர். பழம் பெரும் இயக்குநர் ஆர்.கிருஷ்ணனின் மகன் (இரட்டையர் கிருஷ்ணன் - பஞ்சு). இவர்கள் பராசக்தி, ரத்தக்கண்ணீர் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர்கள். 1988-ல் கலியுகம் படம் மூலம் இயக்குநராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். தொடர்ந்து உத்தம புருஷன், சத்திரியன், பிரம்மா, நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில், சபாஷ் என பல வெற்றிப் படங்களைத் தந்தார். குறிப்பாக சத்திரியன், பிரம்மா போன்ற படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றவை.

மேலும் அஜித் நடித்த பவித்ரா, நேசம் உள்ளிட்ட படங்களும் இயக்கியுள்ளார். தமிழில் மட்டுமல்லாது, இந்தியிலும் வெற்றிகரமான கதாசிரியராகத் திகழ்ந்தார். ஷாரூக்கான் - ரோஹித் ஷெட்டி கூட்டணியின் முக்கிய தூணாகத் திகழ்ந்தவர் சுபாஷ். சூப்பர் ஹிட் படங்களான சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, அக்ஷய் குமார் நடித்த எண்டர்டெயின்மென்ட், ஹவுஸ்ஃபுல் 3 மற்றும் அஜய் தேவ்கன் நடித்த சண்டே போன்ற படங்களின் கதாசிரியர் சுபாஷ்தான். தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சுபாஷ் நேற்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். சென்னை தி.நகர், கோலவிழியம்மன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கே.சுபாஷின் உடலுக்கு ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதி ஊர்வலம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்