முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் அடுத்த மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை : தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி   - டெல்லி மற்றும் அதனையொட்டிய பகுதிகளில், பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
 ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி :

டெல்லியில், தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவர் ஸ்வதந்தர்குமார் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, வரும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும். இந்த தடை டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தடையின்கீழ், பிளாஸ்டிக் கப்கள், மளிகைப் பொருட்களுக்கான பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கும். 

பசுமை தீர்ப்பாயம் கண்டனம் :
இதற்கான சுற்றறிக்கையை டெல்லி நகர மேம்பாட்டு ஆணையம் மற்றும் பிற பொதுத்துறை அதிகாரிகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுப்பியுள்ளது. முன்னதாக, டெல்லியில் காற்று மாசு மற்றும் மூடுபனி காரணமாக ஏற்படும் விபத்துகள் உள்ளிட்டவற்றை கையாளுவதில் டெல்லி அரசு மெத்தனம் காட்டி வருவதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கத.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்