கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கல்லூரி மாணவர்கள் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      சென்னை
 சுகாதார விழிப்புணர்வு

கும்மிடிப்பூண்டி :கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் சென்னை உமையாச்சி கல்லூரி மாணவிகள் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மற்றும் சுகாதார துறையினருடன் இணைந்து வர்தா புயலின் எதிரொலியாக சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள உமையாச்சி நர்சிங் கல்லூரி மாணவிகள் 20 பேர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் வர்தா புயலை ஒட்டி சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடத்தி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மற்றும் சுகாதார துறையினருடன் இணைந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 10 குழுக்களாக பிரிந்து செல்லும் இந்த மாணவிகள் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று கொசுக்களினால் ஏற்படும் வியாதிகள் குறித்தும், கொசுப்புழுவை ஒழிக்கும் முறை குறித்தும் துண்டு பிரசுரங்களை வழங்கியும், வீடுகளில் சுற்றுப்புறத்தில் உள்ள சுகாதார சீர்கேட்டை எடுத்துச் சொல்லியும் இந்த நர்சிங் கல்லூரி மாணவிகள் பிரச்சாரம் செல்லும் போது அவர்களுடன் செல்லும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் அங்குள்ள குப்பைகளை அகற்றி, கொசுமருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கல்லூரி மாணவிகளின் இந்த 3 நாள் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளை கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் இரவி முன்னின்று நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: