கோபிசெட்டிபாளையத்தில் மூன்று அடி நீளமுள்ள மண்ணுளிபாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினர் ஒப்படைத்தனர்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      ஈரோடு
மண்ணூலி பாம்பு

 

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொம்மநாயக்கன்பாளையத்தில் லட்சுமிபத்மநாதன் வீட்டின் பூஜை அறையில் மண்ணுளிபாம்பு ஒன்று படுத்திருந்ததைக்கண்டு பயந்து சத்தம் போட்டுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். பின்னர் வீட்டின் பூஜையறையிலிருந்த மண்ணுளிபாம்பை பிடித்து கோனிசாக்கில் கட்டிவைத்துக்கொண்டு டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டி.என்.பாளையம் வனத்துறையினர் பாம்பை பெற்றுக்கொண்டு அவர்களிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு சென்றனர். பின்னர் 3 அடி நீளமும் இரண்டரை கிலோயும் கொண்ட மண்ணுளிப்பாம்பை பங்காளபுதூர் எருமைக்குட்டை வனப்பகுதியில் மண்ணுளிபாம்பை விடப்படும் என தெரிவித்து எடுத்துச்சென்றனர். பூஜையறையில் பாம்பு படுத்திருந்த சம்பவத்தினால் அப்பகுதி மக்களிடையே பெரும்பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது…

 

இதை ஷேர் செய்திடுங்கள்: