சிறப்பு கிராம சபைக் கூட்டம் வருகிற 28ம் தேதி நடைபெறும்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      விழுப்புரம்
கிராம சபை கூட்டம்

விழுப்புரம்,

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2017-18 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் தயாரிப்பது தொடர்பாக சிறப்பு கிராம சபைக் கூட்டம் 28.12.2016 அன்று காலை 10.00 மணியளவில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது.

 

இச்சிறப்பு கிராம சபையில் 2017-18ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ஊராட்சியில் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

 

இப்பணிகளைத் தேர்வு செய்த பின்னர், அதற்கான தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தினையும், தேர்வு செய்யப்பட்ட பணிகளை முடிக்கத் தேவையான தோராய மனித சக்தி நாட்களையும் கணக்கீடு செய்திடுதல் வேண்டும்.

 

கிராம சபையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்றுள்ளவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கிராமத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தேவையான பணிகளை தேர்ந்தெடுக்கப்படும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,தெரிவித்தார்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: