முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சி பல்லவன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச மேலாண்மை கருத்தரங்கம் நிறைவு விழா

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம,; பகுதியில் அமைந்துள்ள பல்லவன் பொறியியல் கல்லூரியில், மலேசிய ஆசியா- இ - பல்கலைக்கழக மாணவர்களுக்கான சர்வ தேச மேலாண்மை பற்றிய கருத்தரங்கம் டிசம்பர் 19 முதல் டிசம்பர் 21 வரை நடைபெற்றது. நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதன் நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கோபிநாத் வரவேற்புரை ஆற்றினார்;. மலேசிய ஆசியா-இ-பல்கலைக் கழகத்தைச் சார்ந்த "டத்தோ" முனைவர் துரைசாமி கருத்தரங்கின் முடிவுகளைப ;பற்றி விளக்கினார். இந்நிகழ்ச்சிக்குபல்லவன் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் "கலைமாமணி"முனைவர் முத்து, தலைவர், புதுவைத் தமிழ்ச் சங்கம் தiலைமை தாங்கினார். செல்வம், துணைத் தலைவர், விஐடி பல்கலைக் கழகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக நாடுகளில் தமிழ ;மொழிக்கு உள்ள அங்கீகாரத்தைப் பற்றியும், நிர்வாக மேலாண்மையில் இந்தியா பெறவிருக்கும் முக்கியத்துவத்தைப் பற்றியும் விளக்கினார். பல்லவன் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் செயலாளர் கே.ஆர்.சீதாபதி முன்னிலை வகித்தார். பல்லவன் பொறியியல் கல்லூரியின் பொருளாளர் சம்பந்தமூர்த்தி நன்றியுரையாற்றினார். கருத்தரங்கின் மூன்றாவது அமர்வில் "நிர்வாகதிறமை"என்றதலைப்பில் பல்லவன் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் கோபிநாத்;, நான்காவது அமர்வில் "தொடர் விநியோக மேலாண்மை" என்ற தலைப்பில் பாஸ்கர் இயக்குநர் எக்பேண்டஸ் கன்சல்டன்சி சர்வீஸ் அவர்களும் உரையாற்றினர். இவ்விருஅமர்விலும் நவீன உலகில் தலைமைப் பண்புபற்றிய கோட்பாடு, மேலாண்மைத்துறையில் அதன் முக்கியத்துவம், நிறுவனத்தின் வெற்றியில் தொடர் விநியோக மேலாண்மையின் அவசியத்தைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்லவன் பொறியியல் கல்லூரி இயக்குனர்கள் பழனி, மீனாம்பாள் குப்புசாமி, மஞ்சுளாதேவிசிவசண்முகம், ஜானகி புருஷோத்தமன், எத்திராஜ் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இக்கருத்தரங்கில் மலேசியஆசியா-இ-பல்கலைக் கழகத்தைச் சார்ந்தமாணவர்கள் மற்றும் பல்லவன் பொறியியல் கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள்;, மாணவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்