விபத்துக்களை தவிர்க்க ஏ.டி.ஜி.பி., ஆலோசனை கூட்டம்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      ஈரோடு

சாலை விபத்துகளை தடுப்பது குறித்து, ஏ.டி.ஜி.பி., ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சமீப காலமாக ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, விபத்துகளை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்த ஆய்வு கூட்டங்களை ஏ.டி.ஜி.பி., மாஹளி, கடந்த சில நாட்களாக நடத்தி வருகிறார். இதன்படி, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், எஸ்.பி., சிவக்குமார், ஏ.எஸ்.பி., பாலாஜி சரவணன், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், நெடுஞ்சாலை ரோந்து போலீசார், ஆர்.டி.ஓ.,க்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். விபத்து அதிகம் நடப்பதாக கண்டறியப்பட்ட பகுதிகளில், விபத்துக்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, போலீசார், பிற துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. மாலையில், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில், விபத்து அதிகம் நடக்கும் இடங்களில், ஏ.டி.ஜி.பி., ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விபத்துகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்: