முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் : திருப்பதி தேவஸ்தானம் புதிய உத்தரவு

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை  - திருப்பதியின் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் நடந்து சென்று ஏழு மலையானைத் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த தரிசனம் ‘திவ்ய தரிசனம்’ என அழைக்கப்படுகிறது. இதுபோல் நேர்த்திக் கடனாக மலையேறிச் சென்று தரிசிக்கும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படுவதோடு தரிசன ஏற்பாடுகளும் செய்து தரப்படுகிறது. இப்போது ஸ்ரீவாரி சேவகர்கள் என்றழைக்கப்படும் ஏழுமலையா னுக்கு இலவச சேவை செய்யும் தன்னார்வ தொண்டர்கள், அங்க பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் மற்றும் தங்கும் அறைகள் பதிவு செய்யும் பக்தர்கள் ஆதார் அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

ஆதார் கார்டு கட்டாயம் :
இதற்கு பக்தர்களிடையே வர வேற்பு காணப்படுவதுடன் முறை கேடுகள் தவிர்க்கப்பட்ட்டுள்ளன. எனவே, நடைபாதை வழியாக சென்று ஏழுமலையானைத் தரிசிக்கும் பக்தர்களும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆதார் அட்டை இல்லாவிட் டால், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அலிபிரி அருகே உள்ள ‘காலி கோபுரம்’ பகுதியில் உள்ள அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தரிசன அனுமதி டிக்கெட் வழங்கப்படும். அடையாள அட்டை இல்லா விட்டால் மலைப்பாதை வழியாக இனி பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்