தியாகதுருகம் தமிழ்ச் சங்கம் சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர் நினைவு தினத்தினை முன்னிட்டு மாலை அணிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      விழுப்புரம்
kalla 1

தியாகதுருகம் தமிழ்ச் சங்கம் சார்பில் தந்தை பெரியார், எம்.ஜி.ஆர் உள்ளிட்டோரின் நினைவு தினத்தினை முன்னிட்டு தியாகதுருகம் கடைவீதியில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழ்ச் சங்கத் தலைவர் இராதாகிருட்டிணன் தலைமை வகித்து அவரது திருஉருவ படங்களுக்கு மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சங்க செயலாளர் சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற ஆசிரியர் தங்க.சதாசிவம் கண்ணன், சீனு.நரசிம்மன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கல்லை கோவிந்தராஜன், மலரடியான், நாகராசன், இதயம் கிருட்டிணா, பத்ம.ஜெயபிரகாஶ், செயராமன் உள்ளிட்ட சங்க உறுப்பனர்கள் பலரும் பங்கேற்றனர்.,

 

இதை ஷேர் செய்திடுங்கள்: